சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 81 ஆண்டு ஜெயில்- போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பம் ஆனார். முதியவருக்கு 81 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

இடுக்கி பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்.

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இடுக்கி, கஞ்சிக்குழி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த முதியவரை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் 64 வயது முதியவருக்கு 81 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை சிறுமிக்கு வழங்கவும் உத்தரவில் கூறியிருந்தார்.

 

 

Malaimalar