ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு நாடு முழுவதும் தடை

ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்தக் கூடிய குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருளின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Malaimalar