அக்னிபத் திட்டம் – கடற்படையில் சேர 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. 17½ வயது முதல் 21 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பின்னர் இந்த வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியபோதும், இந்தத் திட்டத்தை வாபஸ் பெறமுடியாது என மத்திய அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆள் எடுக்கும் பணிகளை விமானப்படை கடந்த மாதமே தொடங்கியது. இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்திய கடற்படையில் முதல் முறையாக வீராங்கனைகள் சேர்க்கப்பட உள்ளனர். இவர்கள் போர்க் கப்பல்களில் பணியாற்ற உள்ளனர்.

 

Malaimalar