தமிழ், ஆங்கிலம் பாடவேளைகள் வாரத்திற்கு 6 ஆக குறைக்கப் பட்டுள்ளது. சமூக அறிவியல் பாடவேளை வாரத்திற்கு ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்கான பாடவேளை ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தபடுவதாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Malaimalar