கடந்த 7-8 ஆண்டுகளில், 209 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை 75 சதவீதம் அதிகரிப்பு. மறைந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் தனது அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.
அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேரும் வகையில் வளர்ச்சி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாமல் உண்மையான வளர்ச்சி சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில் 9 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள், ஏழைகளில் வீடுகளில் 10 கோடிக்கும் அதிகமான கழிவறைகள், 45 கோடிக்கும் அதிகமானோருக்கு வங்கி கணக்குகள் மற்றும் ஏழைகளுக்கு 3 கோடி இலவச வீடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
2014ஆம் ஆண்டுக்கு முன்பு சராசரியாக 10 ஆண்டுகளில் 50 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. ஆனால் கடந்த 7-8 ஆண்டுகளில், 209 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன, இது நான்கு மடங்கு அதிகமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 7-8 ஆண்டுகளில் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கானக இடங்களின் எண்ணிக்கை 75 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும்.
மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். மத்திய அரசு நிர்ப்பந்தத்தின் கீழ் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவில்லை என்றும், நம்பிக்கையின் பேரில் சீர் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது என்றும் கூறிய பிரதமர், அடுத்த 25 ஆண்டுகளுக்கான சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
mm