பிரக்யானந்தா போன்று அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி

சதுரங்க போட்டி மாணவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும். தமிழக முதல்-அமைச்சர் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தென்காசி வந்துள்ளார். 2-ம் நாளான இன்று காலை தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு மாதிரி பள்ளியில் நடந்த பள்ளிகள் அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கிவைத்து பேசியதாவது:- ஐரோப்பாவில் சதுரங்க விளையாட்டானது தோன்றினாலும் சாதனையாளர்கள் அனைவரும் இந்தியர்களாக உள்ளனர்.

தமிழகத்தில் பிரக்யானந்தா போன்று அரசு பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் திறமை மூலம் சாதனைகள் பல புரிய வேண்டும். சதுரங்க போட்டி மாணவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும். நமது தமிழக முதல்-அமைச்சர் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். என்றும் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மத்தியில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

 

mm