பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில் அவர் கூறியதாவது: ரஷியா-உக்ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக நிதி நிலைமைகள் இறுக்கம் போன்ற உலகளாவிய காரணிகள் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைய முக்கியக் காரணம். பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்ற நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயை விட பலவீனம் அடைந்துள்ளன. எனவே, 2022-ல் இந்த நாணயங்களுக்கு எதிராக இந்திய ரூபாய் வலிமையாக இருக்கிறது என தெரிவித்தார்.
-mm