நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சி

இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி பங்கேற்றனர். மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி பங்கேற்றனர்.

மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பிரிவு உபசார விழாவில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.

நான் பணியாற்ற அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர். ஜனநாயகத்தின் கோயிலாக பாராளுமன்றம் திகழ்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பாராளுமன்றத்தில் பேசவேண்டும். கொரோனா பெரும் தொற்றை எதிர்த்து நாடு சிறப்பாகக் கையாண்டது.

மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தினோம். திரவுபதி முர்மு பெண்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார் என தெரிவித்தார்.

 

-mm