ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்- மத்திய அரசு விளக்கம்

பயனாளிகளின் தற்காலிக பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளதாவது: ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ், மத்திய அரசு ரூ.120 கோடி ஊக்கத் தொகை வழங்குகிறது இந்த ஊக்கத் தொகை பெறும் 23 பயனாளிகளின் தற்காலிக பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த பயனாளிகள் பட்டியலில் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் மற்றும் 11 ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த திட்டத்தின் பயன் பெறும் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான தகுதியாக ட்ரோன் உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.2 கோடியாக இருக்க வேண்டும். ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அல்லாதவர்களுக்கான தகுதியாக ட்ரோன் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.4 கோடியாகவும், ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு விற்பனை வருவாய் ரூ.1 கோடியாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

-mm