இந்தியாவிற்கு ஒரு மொழி, ஒரு மதம் சாத்தியமில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே நாடு வலிமை பெறும்.

கேரள மாநிலம் திருச்சிசூரில் நடைபெறும் மனோரமா செய்தி ஊடகத்தின் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழ் மலையாள மொழிகள் இடையே ஆழமான உறவு உள்ளது. பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையுடன் வாழ, மொழி வாரி மாநிலங்களை முன்னாள் பிரதமர் நேரு உருவாக்கிக் கொடுத்தார். கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு ஒரு மொழி, ஒரு மதம் சாத்தியமில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் மாநிலங்களையும் காப்பதே நாட்டை காப்பதற்கான அர்த்தம்.

மக்களின் அன்றாட தேவைகளை பார்த்து பார்த்து நிறைவேற்றுவது மாநில அரசுதான். மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே நாடு வலிமை பெறும். வலுவான மாநிலங்கள் மத்திய அரசுக்கு பலம்தானே தவிர பலவீனம் அல்ல. இந்தியா மேலும் வலிமையுடன் இருக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

-mm