செஸ் ஒலிம்பியாட்- தமிழக வீரர் குகேஷ், நந்திதா வெற்றி

இத்தாலியின் வோகடுரோவை எதிர்கொண்ட தமிழக வீரர் குகேஷ் 34-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதேபோல், மகளிர் பி அணியில் எஸ்தோனியா அணி வீராங்கனை நார்வாவை வந்திகா அகர்வால் வீழ்த்தினார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது சுற்று ஆட்டம் நடந்தது.

இந்த சுற்றிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. போட்டியில் பங்கேற்ற 6 இந்திய அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 4வது சுற்று ஆட்டம் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இத்தாலி அணிக்கு எதிராக விளையாடிய தமிழக வீரர் குகேஷ் வெற்றிப்பெற்றுள்ளார்.

இத்தாலியின் வோகடுரோவை எதிர்கொண்ட தமிழக வீரர் குகேஷ் 34-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றுள்ளார். ஜார்ஜியா வீராங்கனையை எதிர்கொண்டபோது 42-வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றியடைந்தார். இதேபோல், மகளிர் பி அணியில் எஸ்தோனியா அணி வீராங்கனை நார்வாவை வந்திகா அகர்வால் வீழ்த்தினார்.

இத்தாலி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா டிரா செய்தார். இத்தாலி வீரர் லோடிசி லோரன்சோவிற்கு எதிராக வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா டிராவில் முடித்தார்.

 

-mm