ஜூலை மாதத்தில் 600 கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனை நடந்து சாதனை- பிரதமர் மோடி

இது புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் செய்வதற்கும் மக்களின் கூட்டு முயற்சியைக் குறிக்கிறது. கொரோனா தொற்று காலங்களின்போது, டிஜிட்டல் பரிமாற்றங்கள் உதவியாக இருந்தன.

இந்தியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடிக்கு பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மேலும், இது புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் செய்வதற்கும் மக்களின் கூட்டு முயற்சியைக் குறிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜூலை மாதத்தில் யுபிஐ மூலம் 600 கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது, இது 2016-ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகம்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவரது பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மேடி, ” இது ஒரு சிறந்த சாதனை. புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும், பொருளாதாரத்தை தூய்மைப்படுத்துவதற்கும் இந்திய மக்களின் கூட்டு முயற்சியை இது குறிக்கிறது. குறிப்பாக, கொரோனா தொற்று காலங்களின்போது, டிஜிட்டல் பரிமாற்றங்கள் உதவியாக இருந்தன” என்று குறிப்பிட்டார்.

 

-mm