அறிவியல்-தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனராக நெல்லை பெண் நியமனம்

முதல் பெண் தலைமை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ள நல்லதம்பி கலைச்செல்வியின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். தன்னுடைய புரிந்து கொள்ளும் திறன் மூலம் கல்லூரியில் அறிவியில் குறித்த கருத்துக்களை எளிதாக மனதில் நிலை நிறுத்தி கொண்டதாக நல்லதம்பி கலைச்செல்வி தெரிவிக்கிறார்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் என்பது தன்னாட்சி அரசு அமைப்பாகும். இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் பங்களிப்புடன் நாட்டின் ஆய்வு மற்றும் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த அமைப்பின் தலைமை இயக்குனராக காரைக்குடியில் உள்ள சி.ஐ.எஸ்.ஆர்.-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய இயக்குனரான நல்லதம்பி கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் தலைமை இயக்குனராக இருந்த சேகர் மாண்டே கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெற்றார். இதனால் அந்த இடத்திற்கு மூத்த விஞ்ஞானியான நல்லதம்பி கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் செயலாளர் பதவியையும் கூடுதலாக வகிக்க உள்ளார்.

அவரது நியமனம் அமைச்சரவையின் நியமனக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி காலமானது அடுத்த 2 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது.

பதவியின் பொறுப்பு ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த உத்தரவு வரை, எது முந்தையதோ அது அமலில் இருக்கும். இவர் தனது முதல் ஆராய்ச்சி பயணத்தை காரைக்குடியில் இதே நிறுவனத்தில் தான் தொடங்கினார். முதல் பெண் தலைமை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ள நல்லதம்பி கலைச்செல்வியின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.

அங்குள்ள பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர். தன்னுடைய புரிந்து கொள்ளும் திறன் மூலம் கல்லூரியில் அறிவியில் குறித்த கருத்துக்களை எளிதாக மனதில் நிலை நிறுத்தி கொண்டதாக அவர் தெரிவிக்கிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக இவர் தனது ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் அதிகமாக மின்வேதியியல் குறித்தே ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அவை ஆற்றல் சேமிப்பு எந்திரங்கள் வடிவமைப்புக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது. தற்போது அவர் சோடியம், லித்தியம் பேட்டரிகள் மற்றும் சூப்பர் கேபாசிட்டர்கள் உள்ளிட்டவற்றில் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார்.

இந்திய அரசின் நோக்கமான மின்சார இயக்கத்திற்கான வழிமுறைகளில் இவர் முக்கிய பங்காற்றி வருகிறார். இவர் 125-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி உள்ளார்.

 

 

-mm