இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வளர்ந்த நாடுகள் ஆர்வம்- மத்திய மந்திரி தகவல்

இன்று உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்றுள்ளது. வர்த்தகம் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமைத் தன்மை அவசியம்.

தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற வியாபாரிகள் சம்மேளன கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல், பேசியதாவது: இந்தியாவை இப்போது பொருளாதார வளர்ச்சியின் எந்திரமாக உலகம் பார்க்கிறது.

2014 ஆம் ஆண்டுக்கு முன்னர், இந்தியப் பொருளாதாரம் பலவீனமானதாகக் கருதப்பட்டது. இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதில் முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. இன்று உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வளர்ந்த நாடுகள் மிகவும் ஆர்வமாக உள்ளன.

வெளிப்படைத்தன்மை மற்றும் எளிதாக வணிகம் செய்ய வேண்டியதன் அவசியம். வணிகங்களின் இணக்கச் சுமையைக் குறைக்க அரசுடன் இணைந்து வர்த்தகர்கள் பணியாற்று வேண்டும். நெறிமுறை வர்த்தக நடைமுறைகளை அவர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

-mm