தமிழகத்தின் வாசல் வரை வந்துவிட்டது- சீன உளவு கப்பலால் உச்சக்கட்ட அபாயம்

தமிழகத்தின் வாசல் கதவு வரை அந்த உளவு கப்பல் வரப்போகிறது. இந்தியா-சீனா இரு நாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர்.

இலங்கையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு அந்த நாட்டு மக்கள் பட்டினியும், பசியுமாக கிடந்தபோது அய்யோ பாவம் என்று இந்தியா எல்லா அத்தியாவசிய பொருட்களையும் கொடுத்தது. பெட்ரோல், டீசல், அரிசி, கோதுமையை வாரி வாரி வழங்கியது. அனைத்தையும் வாங்கி தின்றுவிட்டு இன்று இந்தியாவை பாதுகாப்பு விஷயத்தில் அலறவிட்டு அல்லாட வைத்திருக்கிறது இலங்கை அரசு.

பொதுவாகவே சிங்களத் தலைவர்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள் என்பது கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் பல தடவை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது மீண்டும் இந்தியாவுக்கு துரோகம் செய்யும் ஒரு செயலை சிங்கள தலைவர்கள் நிகழ்த்தி காட்டி உள்ளனர்.

அவர்கள் துரோகத்தால் சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது.

நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த யுவான் வாங்-5 கப்பல் கடந்த 11-ந் தேதியே இலங்கைக்கு வருவதாக இருந்தது. இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததும், கப்பலின் வருகையை காலவரையின்றி ஒத்தி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டது.

ஆனால் சீனா அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருப்பதால் நாங்கள் வருவதை தடுக்க இயலாது என்று சீனா அதிகாரத்துடன் பதில் அளித்தது.

இதையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா-சீனா இரு நாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர். இறுதியில் சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக யுவான் வாங்-5 உளவு கப்பல் நாளை மறுநாள் ஹம்பாத்தோட்டை துறைமுகத்துக்கு வந்துவிடும். 22-ந் தேதி வரை அது அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும்.

இந்த 7 நாட்களில் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் அந்த கப்பல் ஈடுபடக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் சீனா இதையெல்லாம் நிச்சயம் மதிக்காது. நிச்சயமாக அது உளவு தகவல்களை சேகரிக்கும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அழுத்தத்தையும் மீறி சீனாவுக்கு ஆதரவாக இலங்கை எடுத்திருக்கும் முடிவு வரலாற்று பிழையாகக் கருதப்படுகிறது.

இந்த மாத இறுதியில் சர்வதேச நிதி ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. அந்த ஆணையத்திடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை கடன் வாங்க இலங்கை தீவிரமாக உள்ளது. இதற்கு சீனா உதவ உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதை நம்பித்தான் சீனா பக்கம் இலங்கை சாய்ந்திருக்கிறது.

 

-mm