சுதந்திர தின விழா- மடகாஸ்கர் நாட்டிற்கு 15 ஆயிரம் சைக்கிள்களை வழங்கியது இந்தியா

இந்திய தூதரக கட்டிடம் மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பு. இந்திய தூதர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை.

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மடகாஸ்கருடன் இந்தியா நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. இரு நாடுகள் இடையே சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், தகவல் பரிமாற்றம் உள்ளிடட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இந்நிலையில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா இன்று வழங்கியுள்ளது. நிகழ்ச்சியில் மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே ஆகியோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஓட்டி சென்று இரு நாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

மேலும், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, மடகாஸ்கர் தலைநகர் அண்டனானரிவோவில் உள்ள இந்திய தூதரக கட்டிடம் இந்திய தேசிய கொடியின் நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்திய தூதர் அபய் குமார், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

-mm