அதிகரிக்கும் போக்சோ புகார்கள்: கேரள அரசு, சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கேரளாவில் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் அதிகரித்து வரும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க கேரள அரசும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் குற்றங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வே இக்குற்றங்களை குறைக்க உதவும். திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி மாணவிகள், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

குறிப்பாக 18 வயதுக்கும் குறைவான சிறுமிகள் கர்ப்பம் தரிப்பதும், அதனை வெளியில் கூறாமல் மறைப்பதும், பின்னர் ஆஸ்பத்திரிகளுக்கு சென்ற பின்னரே இதுபற்றிய தகவல் வெளியே தெரிவதுமான சம்பவங்களும் நடந்தது. இதில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இது தொடர்பான ஒரு வழக்கில் குற்றவாளி ஒருவர் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, கேரள அரசுக்கும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்திற்கும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்விபரம் வருமாறு:-

கேரளாவில் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் அதிகரித்து வரும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க கேரள அரசும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகளை அறிந்து கொள்ளவும், அதில் இருந்து மீண்டு வருவதற்கான விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இதனை அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட வேண்டும். இதற்கான பாடதிட்டங்களை மாணவிகளின் வயதுக்கு ஏற்ற வகையில் தயாரிக்க வேண்டும்.

இதற்காக நிபுணர் குழு ஒன்றை 2 மாதங்களில் உருவாக்க வேண்டும். பாலியல் குற்றங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வே இக்குற்றங்களை குறைக்க உதவும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

 

-mm