அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் முதலிடத்தில் நீடிக்கிறார். முகேஷ் அம்பானிக்கு 11வது இடம் கிடைத்துள்ளது.
இந்திய தொழில் அதிபரான கவுதம் அதானி, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் தரவரிசை பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் உய்ட்டன் நிறுவன தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அவரது தற்போதைய சொத்து 137.4 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை. அதானி குழுமம் துறைமுகங்கள், தளவாடங்கள், சுரங்கம், எரிவாயு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் விமான நிலையங்கள் உள்பட பல்வேறு துறைகள் தொடர்பான வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது.
உலக பணக்காரர்கள் தரவரிசையில் அமெரிக்கா தொழில் அதிபர் எலோன் மஸ்க் 251 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். 153 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2வது இடத்தில் நீடிக்கிறார். 91.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-mm