விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

புலியகுளம் முந்தி விநாயகருக்கு மாப்பிள்ளை ராஜா அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று விநாயாகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் எதிரொலியால் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் கடும் கட்டுப்பாடுகளுடனே கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்தளவில் உள்ளதால் மக்கள் முழு மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு கோவில்களிலும் விநயாகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், புலியகுளம் முந்தி விநாயகருக்கு மாப்பிள்ளை ராஜா அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 96 வகையான திரவியங்கள் கொண்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 4 டன் பூக்கள் கொண்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார்.

 

-mm