பருவ நிலை மாற்றத்தால் வளரும் நாடுகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன

உலகளவில் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம். மீட்பு நடவடிக்கைகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மந்திரிகளுக்கான மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய பருவநிலை மாற்றத்திற்கான மந்திரி பூபேந்தர் யாதவ் கலந்துகொண்டார்.

நிறைவு நாளில் அவர் பேசியதாவது: பருவநிலை மாற்றத்தை தடுக்க, உலகளவில் ஒன்றிணைந்து வலுவான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம். நிலையான மீட்பு நடவடிக்கைகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும்.

பருவ நிலை மாற்றம் என்பது உலகளாவிய நிகழ்வாக இருந்தாலும், அதன் எதிர்மறையான தாக்கங்கள் குறிப்பாக, வளரும் நாடுகளில் உள்ள மக்களை பாதிக்கிறது. இயற்கை வளங்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலையில் பருவநிலை மாறுபாடு மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்கும் திறன் குறைவாக உள்ளது.

வளரும் நாடுகளில் இருந்து குறைந்த பட்ச பங்களிப்பு செய்தவர்கள் புவி வெப்பமயமாதலின் தாக்கத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கார்பன் அளவு குறைக்கப்பட்ட சுத்தமான எரிசக்தி, மற்றும் திறமையான தொழில்துறை வளர்ச்சி, நிலையான விவசாயம் ஆகியவற்றிற்கான இந்தியாவின் முயற்சியானது அனைவருக்கும் நிலையான வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

-mm