முதலில் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 72 ரன்கள் குவித்தார். இலங்கை அணி வீரர் மெண்டிஸ் 57 ரன் அடித்தார். ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
துபாயில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 பிரிவு ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியில் இறங்கிய ரோகித் சர்மா, 72 ரன்னில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 34 ரன்னில் அவுட்டானார். பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் 17 ரன்னிலும் ஹூடா 3 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது.
பின்னர் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் நிசாங்கா 52 ரன்னும், மெண்டிஸ் 57 ரன்னும் குவித்தனர். பானுகா ராஜபக்சே 25 ரன்னும், கேப்டன் தசன் சனாகா 33 ரன்னும் அடித்து களத்தில் இருந்தனர். இலங்கை அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதையடுத்து அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-mm