நவீன ஏவுகணை சோதனை வெற்றி

வான் வழியாக வரும் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிக்கக்கூடிய நவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை மிகவும் சிறப்பானது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நவீன ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ராணுவ மையத்தில் நேற்று நடந்தது. தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை மிகவும் சிறப்பானது.

எதிரிகள் வானில் இருந்து செலுத்தும் ஏவுகணைகளை அடையாளம் கண்டு, உடனடியாக செயல்பட்டு வானிலேயே அதை தாக்கி அழிக்கும் திறன் உடையது இந்த ஏவுகணை. நம் ராணுவத்தின் படை செல்லும்போது, வானில் இருந்து தாக்குதல் நடத்தினால், அதை முறியடிக்கும் வகையில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

தரையில் பயணம் செய்யும்போதும், வாகனத்தில் இருந்து இதை ஏவ முடியும். மொத்தம் 6 வகையான சோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் துல்லியமாக, வெற்றிகரமாக நடந்ததாக டி.ஆர்.டி.ஓ., கூறியுள்ளது. இந்த முயற்சிக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

-mm