அமெரிக்காவில் அரசு முறைப்பயணம் மேற்கொண்ட மத்திய தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தனது கடைசி நிகழ்ச்சியாக தெற்கு கலிஃபோர்னியா நகரின் வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடலில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் நிகழும் மாற்றத்திற்கான பணிகள் உலகப் பொருளாதார வரிசையில் நாட்டை 5வது இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களின் தாக்கத்தால், 2047-ல் இந்தியா 35 முதல் 45 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார நாடாக இருக்கும் என்ற இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.
-mm