ஐ.நா.சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய துருக்கி அதிபர்- இந்தியா அதிருப்தி

ஐ.நா பொது சபையில் உலக தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட கூட்டம் நடந்தது. கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை எர்டோகன் சந்தித்து பேசி இருந்தார்.

ஐ.நா பொது சபையில் உலக தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் பேசும்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீரர் விவகாரத்தை எழுப்பினார்.

அவர் கூறும்போது, இந்தியாவும், பாகிஸ்தானும் 75 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் பெற்று இறையான்மையை நிலைநாட்டிய பிறகும் இரு நாடுகளும் அமைதி மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. காஷ்மீரில் நிரந்தர அமைதி மற்றும் வளம் ஏற்படும் என நம்புகிறோம் என்றார்.

கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை எர்டோகன் சந்தித்து பேசி இருந்தார்.

இந்த நிலையில் தான் ஐ.நா.சபையில் காஷ்மீர் விவகாரத்தை எர்டோகன் எழுப்பி உள்ளார். பாகிஸ்தானுக்கு நெருக்கமாக உள்ள எர்டோகன் தெரிவித்த இக்கருத்தால் இந்தியா அதிருப்தி அடைந்து உள்ளது.

ஏற்கனவே ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எர்டோகன் தெரிவித்த கருத்துகளை முற்றிலும் நிராகரிப்பதாக இந்தியா தெரிவித்து இருந்தது. தற்போது மீண்டும் அவர் அதே கருத்தை தெரிவித்து இருப்பது இந்தியா-துருக்கி இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

-mm