உலக தற்கொலை தடுப்பு தின விழா

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு புதுவை மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மனநலத் துறை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழா கொண்டாடப்பட்டது.

மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மணக்குள விநாயகர் கல்வி நிறுவன செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், மருத்துவ கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே,கார்த்திகேயன், கலைச்செல்வன் மற்றும் மருத்துவமனை கண்காணி ப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

மனநலத்துறை தலைவர் டாக்டர் அருண் வரவேற்றார். மனநலத்துறை பேராசிரியர் அசோக்குமார் “தற்கொலையின் காரணம், எச்சரிக்கை அறிகுறி” என்ற தலைப்பிலும் மற்றும் பேராசிரியர் அருள்சரவணன் “தற்கொலை தடுப்பு முறைகள்” என்ற தலைப்பிலும் சிறப்புரை யாற்றினார்கள். விழாவில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் மற்றும் செவிலியர் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

-mm