சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாறும் ஐபோன் 14 தயாரிப்பு நடவடிக்கை

ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய சமீபத்திய ஐபோன் 14 மாடலை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனம் தற்போது சீனாவில் நிறுவப்பட்டுள்ள சில ஆப்பிள் தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

செப்டம்பர் தொடக்கத்தில் ஆப்பிள் ஐபோன் 14 மாடலை அறிமுகப்படுத்தியது. இது புதிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த ஆண்டு இறுதிக்குள், ஆப்பிள் தனது உற்பத்தி நடவடிக்கைகளில் 5 வீதத்தை இந்தியாவுக்கு மாற்றும் என்று நம்புகிறது என்று கூறப்படுகிறது.

2025ஆம் ஆண்டுக்குள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஒரு ஐபோன் மாடல் தயாரிக்கப்படும் என்பது அவர்களின் நம்பிக்கை.

 

 

-ift