2030-ம் ஆண்டுக்குள் 60 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர்

உலகை உலுக்கிய கொரோனா நோயின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் சுமார் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்

உலகை உலுக்கிய கொரோனா நோயின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பிரச்சினை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் இன்டர்மிட் ஜில் சமீபத்தில் ஆய்வறிக்கை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் சுமார் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த எண்ணிக்கை இனி வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உலகளாவிய வறுமை நிலையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படியே உள்ளது. வருகிற 2030-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 60 கோடியை எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

-mm