இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா வெளியுறவு துறை விடுத்துள்ள எச்சரிக்கை

இந்தியாவில் பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாலும், முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாலும், இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்கள் கவனமாக இருக்கும்படி அமெரிக்கா வெளியுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் வன்முறை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருப்பதால் அமெரிக்கர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தியாவில் பாலியல் வன்கொடுமை, வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாலும், சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் முன்னெச்சரிக்கையின்றி பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூர் குழப்பங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வன்முறையை கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீர் செல்வதை அமெரிக்கர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

-ift