உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் – இந்திய தூதரகம்

உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் நேற்று முன்தினம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாலத்தில் குண்டுவெடித்ததற்கு உக்ரைன் மீது குற்றம்சாட்டிய மறுநாளே இந்த உக்கிரமான தாக்குதலை ரஷியா அரங்கேற்றி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் உக்ரைனில் உள்ள நிலை குறித்து தூதரகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.

 

-mm