விளம்பரம் ஆசியா ஒரு காலத்தில் ‘ஓஹோ’ என்றிருந்து….இப்போது தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடும் பாலிவுட்

ஆண்டுக்குச் சராசரியாக சுமார் 1,600 திரைப்படங்கள். அவற்றில் உலகத்தின் கவனத்தை ஈர்த்த பல இந்தித் திரைப்படங்கள். ஆனால் தற்போது பாலிவுட் என்று அழைக்கப்படுகின்ற இந்தித் திரையுலகமே தத்தளித்துக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அவற்றைக் காணத் திரையரங்குகளுக்கு வருவோரின் எண்ணிக்கை பெரும் சரிவு.அக்ஷய் குமார், ஆமிர் கான் ஆகிய பிரபலங்கள் நடித்த திரைப்படங்களுக்கும் அவ்வளவு வசூல் இல்லை…

சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட சுமார் 50 பாலிவுட் படங்களில் கிட்டத்தட்ட 10 மட்டுமே எதிர்பார்த்த வருவாயைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாலிவுட்டின் சரிவுக்குக் காரணம்?

ஒரு பக்கம் இணையக் காணொளிச் சேவைகள். பல படங்கள், நாடகங்கள்… அனைத்தும் ஒரு படத்தைத் திரையரங்கில் பார்க்கும் செலவில்…

இன்னொரு பக்கம் வித்தியாசமான கதைகளோடு தமிழ், தெலுங்கு போன்ற மற்ற மொழிப் படங்கள்.

இத்தனை போட்டிக்கு இடையே தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறுகிறது பாலிவுட்.

 

 

-smc