நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கப்படும் – பிரதமர் மோடி உறுதி

ம.பி.யில் பிரதம மந்திரி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை பயனாளிகளிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். கடந்த 8 ஆண்டுகளில் 3.5 கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

மத்திய பிரதேசத்தில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை பயனாளிகளிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த வீடுகளில் மின்சாரம், குடிநீர் இணைப்பு, கழிப்பறை மற்றும் காஸ் இணைப்பு என அனைத்து வசதிகளும் இருக்கும்.

நாட்டில் சமூக பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முக்கிய ஊடகமாக பிரதம மந்திரி அவாஸ் யோஜனா மாறியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 3.5 கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டில் வாழ்பவர்களின் நலனுக்காக மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. வீட்டு வசதி வாரியங்களுக்கு கட்டிடங்கள் கட்ட அரசின் மொத்த செலவு ரூ.22 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது என தெரிவித்தார்.

 

-mm