தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வைரஸ் உருமாற்றம் ஏதும் தற்போது கண்டறியப்படவில்லை. நாடு முழுவதும் 380 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி (XBB) வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வைரசின் உருமாற்றங்களை கண்காணித்து வரும் ‘கிசியாத்’ (GISIAD) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி வைரஸ் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் எக்ஸ்.பி.பி வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 175 பேர், மேற்கு வங்காளத்தில் 103 பேர் என நாடு முழுவதும் 380 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இந்த வகை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வைரஸ் உருமாற்றம் ஏதும் தற்போது கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் இருப்பதாகவும் வைரஸ்களின் உருமாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-mm