எந்நேரத்திலும் மின்சாரம்… முற்றிலும் சூரியச் சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமம்

சூரியச் சக்தி இந்தியாவின் மோதேரா கிராமத்தின் தெருக்களை மட்டும் விளக்கேற்றவில்லை. கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் பிரகாசமாக்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அது முற்றிலும் சூரியச் சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமம்.

அங்கு சுமார் 6,500 பேர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் குயவர்கள், விவசாயிகள், தையல்காரர்கள். சூரியச் சக்தியில் இயங்கும் மின்சாரம் நேரத்தைச் சேமிப்பதோடு அதிகப் பொருள்களைச் செய்ய உதவுவதாக அவர்களில் சிலர் கூறினர்.

மின்சாரக் கட்டணம் குறைந்திருக்கிறது. வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. மோதேராவில் 1,300க்கும் அதிகமான சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்கான செலவு சுமார் 10 மில்லியன் டாலர்.

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது எரிசக்தித் தேவைகளில் பாதியை இயற்கை எரிசக்தி மூலம் பெறத் திட்டமிட்டுள்ளது.

 

-smc