டெல்லியில் விவசாய நிலத்தை எரிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அதனால் அங்குக் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளது.
வார இறுதியிலிருந்து காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவு 20 விழுக்காடு உயர்ந்ததாக டெல்லி அரசாங்கம் தகவல் வெளியிட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் காற்றுத் தூய்மைக்கேடு இன்னும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையன்று (30 அக்டோபர்) கடுமையான காற்றுத் தூய்மைக்கேட்டால் டெல்லியில் பெரும்பாலான கட்டுமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு இன்று மிக மோசமான அளவில் இருக்கிறது; அது 400 புள்ளிகளைத் தாண்டியது.
காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளைத் தாண்டும்போது, அது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். ஏற்கனவே நோயுற்றவர்களை அது இன்னும் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
சுமார் 20 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட டெல்லி, உலகின் மிகவும் மோசமான காற்றுத்தூய்மைக் கேட்டை எதிர்நோக்குகிறது.
-mm