கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் கைதான பெண்ணுக்கு ஜாமீன் மறுப்பு

கைதான லைலா, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தார். மனு விசாரணைக்கு வந்த போது லைலாவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பத்மா, ரோஸ்லி என்ற 2 பெண்கள் கடத்தி கொலை செய்யப்பட்டனர். அவர்களை நரபலி கொடுத்ததாக மந்திரவாதி முகமது ஷபி, மற்றும் பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 12 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கைதான லைலா, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது லைலாவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் லைலாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து லைலாவின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

 

-mm