கொரோனா பரவலை தடுக்க 4-வது தவணை தடுப்பூசி தேவை இல்லை- மருத்துவ நிபுணர்கள் கணிப்பு

ஒமைக்ரான் அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு ஆண்டு ஆகிறது. புதிய மாறுபாடு பதிவாகும் வரை 4-வது பூஸ்டர் டோஸ் தேவை இல்லை. கொரோனா வைரசின் புதிய மாறுபாடு வரும் வரை 4-வது தவணை தடுப்பூசி தேவையில்லை என்று பிரபல மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மூத்த தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் ராமன் கங்காகேத்தா இது தொடர்பாக கூறியதாவது:- தற்போது ஒமைக்ரான் பரவலாக புழக்கத்தில் உள்ளது. மேலும் புதிய துணை வகைகள் அறியப்பட்டுள்ளன.

இது ஒன்றிணைந்த பரிணாமமாக மேலும் மாறாததால் 4-வது தவணை தடுப்பூசி தேவையில்லை. ஒமைக்ரான் அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு ஆண்டு ஆகிறது. புதிய மாறுபாடு பதிவாகும் வரை 4-வது பூஸ்டர் டோஸ் தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

-mm