தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து- அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தால் அரையிறுதி செல்லும். நெதர்லாந்து அணியின் அரை இறுதி வாய்ப்பு முடிந்து போய் விட்டது. அதன்படி, நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்புடன் ஆடினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டீபன் மைபர்க் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். மேக்ஸ் ஒடவ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய டாம் கூப்பர் 19 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. ஆக்கர்மேன் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

இந்த ஆட்டத்தின் இறுதியில், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும், நெதர்லாந்தின் வெற்றியால் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. க்ரூப் பி பிரிவில் 6 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

-mm