இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாலம் ஒன்று விழுந்து 135 பேர் மாண்டதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பாலங்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை எழுந்துள்ளது. விழுந்த மோர்பி பாலம் 100 ஆண்டுக்கு மேல் பழைமையானது.
இந்தியாவில் சுமார் 173,000 பாலங்கள் உள்ளதாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது. அதில் ஏறத்தாழ 36,000 பாலங்கள் இந்தியா பிரிட்டனின் ஆட்சிக்குக்கீழ் இருந்தபோது கட்டப்பட்டவை.
கிட்டத்தட்ட 6,700 பாலங்கள் அதைவிடப் பழையவை. அவற்றில் குறைந்தது 5,300 பாலங்கள் பாழடைந்துவிட்டன என்றும் அவை உடனடியாகச் சீர் செய்யப்படவேண்டும் என்றும் The Guardian குறிப்பிட்டது.
அவற்றைத் தினமும் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைப்பதாகக் கூறப்படுகிறது. பிரிட்டன் கட்டிய பாலங்கள் சிறிய சுமைகளை எடுத்துச் செல்வதற்கானவை என்று இந்தியப் பாலப் பொறியாளர் கழகத்தின் உறுப்பினர் சாஹில் மத்ரே சொன்னார்.
அவை 3 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதிக்கப்படவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
-smc