தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்

வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. நவம்பர் 11ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 11ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.

 

-mm