உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி- டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார்

நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்றுள்ளார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

மேலும் அவருடைய அலுவல் பணிகளும் முடித்து வைக்கப்பட்டன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்றுள்ளார். கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10 வரை தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

 

-mm