இந்தியா ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றதை முன்னிட்டு விளக்கொளியில் ஜொலிக்கும் பாரம்பரிய சின்னங்கள்

ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா நேற்று ஏற்றதையொட்டி, இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 100 பாரம்பரிய சின்னங்கள் நேற்று விளக்கொளியில் ஜொலித்தன.

7-ந்தேதி வரை அவற்றை விளக்கொளியில் ஜொலிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சின்னங்களின் உச்சியில், ஜி20 அடையாள சின்னமும் வைக்கப்பட்டுள்ளது. ஹூமாயூன் கல்லறை, கொனார்க் சூரீய கோவில், ஷெர் ஷா சூரி கல்லறை உள்ளிட்டவை அந்த பாரம்பரிய சின்னங்களில் அடங்கும். இதுபோல், ‘யுனெஸ்கோ’வின் உலக பாரம்பரிய சின்ன அந்தஸ்து பெற்ற 40 கலாசார, இயற்கை தலங்களும் விளக்கொளியில் ஜொலித்ததுடன், ஜி20 அடையாள சின்னம் வைக்கப்பட்டன.

தாஜ்மகால், குதுப்பினார், ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி மற்றும் திப்பு சுல்தான் அரண்மனை, கோல் கம்பாஸ், சாஞ்சி புத்தமத சின்னங்கள், குவாலியர் கோட்டை ஆகியவையும் அவற்றில் அடங்கும். மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணலில் ஜி20 அடையாள சின்னத்தை உருவாக்கி இருந்தார்.

 

 

-mm