டெல்லியில் 50% வாக்குகள் மட்டுமே பதிவு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் காலை முதலே வரிசையில் வந்து வாக்களித்தனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில், காலை 10.30 மணியளவில் 9 சதவீதமும், மதியம் 12 மணிவரை 18 சதவீதம் அளவுக்கும் வாக்கு பதிவு இருந்தது.

மதியம் 2 மணிவரை மந்தகதியிலேயே வாக்கு பதிவு நடந்துள்ளது. இதன்படி, மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்பின்பு, மாலை 4 மணி நிலவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் மாலை 4 மணிவரை 45 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நடந்து முடிந்த மாலை 5.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

 

 

-mm