ஆந்திரா, தெலுங்கானாவில் 5 இடங்களில் தங்க காசு ஏ.டி.எம். மையம்

துபாயை சேர்ந்த தங்க நகை வியாபாரியான சையத் தரோஜ் என்பவர் ஆந்திராவில் 5 இடங்களில் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதை போல் தங்க காசு எடுக்கும் ஏ.டி.எம். மையங்களை திறந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் பெத்தப்பள்ளி, வாரங்கல், கரீம் நகர், செகந்திராபாத் மற்றும் செகந்திராபாத் பில்டர் ஹவுஸ் என தங்க காசு ஏ.டி.எம். மையங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த ஏ.டி.எம் மையங்களில் 1/2, 1,2,5, 10, 20, 50 கிராம் எடையுள்ள தங்க காசுகள் வைக்கப்பட்டு உள்ளது. ஏ.டி.எம். மையங்களில் தங்கத்தின் விலை நிலவரங்கள் மற்றும் தங்க காசுகளின் விலை நிலவரம் குறித்து தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது.

தங்க காசு வாங்க விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை ஏ.டி.எம். எந்திரத்தில் செலுத்தி தங்களுக்கு தேவையான அளவு தங்கக் காசுகளை எடுத்துக் கொள்ளலாம். செகந்திராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மையத்தை தெலுங்கானா மகளிர் ஆணைய கமிஷனர் சுனிதா லஷ்மண் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.

 

-mm