சட்டசபை தேர்தலில் வெற்றி: இமாசல பிரதேச மக்களுக்கு மல்லிகார்ஜூன கார்கே நன்றி

இமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் பா.ஜனதாவும், காங்கிரசும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

இது தொடர்பாக இமாசல பிரதேச மக்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் காங்கிரசின் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயும் மாநில மக்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெறச்செய்த இமாசல பிரதேச மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. அத்துடன் கட்சியின் அனைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி’ என தெரிவித்தார்.

-mm