உக்ரைன் போருக்கு இடையேயும் தனது மருத்துவ கல்வியை தொடரும் இந்திய மாணவர்கள்

மருத்துவ கல்வியை தொடரும்  சுமார் 1,100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உள்ளனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போரானது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியத்தூதரகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேறுமாறு கூறியது. ஆனாலும் தற்பொழுது உக்ரைனில் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து அக்டோபர் மாதம் நடந்த லோக்சபா மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனகாஷி லேகி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேறுமாறு கிய்வில் உள்ள இந்திய தூதரகம் ஆலோசனை கூறியதாக, கூறினார்.

மேலும் உக்ரைனில் மருத்துவக் கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களில் பெரும்பாலோர் போர் தொடங்கியதிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர், தற்போது சுமார் 1,100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உள்ளனர், என்றும் அமைச்சர் மீனகாஷி லேகி கூறினார்.

 

 

-ds