இந்திய அரசு மீதான சைபர் தாக்குதல்கள் 95% அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டின், இரண்டாம் பாதியில் இந்திய அரசுத் துறை மீதான சைபர் தாக்குதல்கள் 95% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது.

கடந்த ஆண்டை விட இந்த 2022ஆம் ஆண்டில் இந்திய அரசின் துறைகள் மீது குறிவைக்கும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான கிளவுட் எஸ்இகே (CloudSEK) தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சைபர் தாக்குதல்கள் 95% அதிகரித்துள்ளன.

இந்திய அரசாங்க நிறுவனங்கள் மீதான மொத்த சைபர் தாக்குதல்களில், கடந்த 2021 இல் 6.3% இல் இருந்து 2022 இல் 13.7% ஆக உயர்ந்துள்ளது, இது உலகளவில் சைபர் கிரிமினல்களுக்கு, எளிதாக இலக்கு வைக்கப்படும் நாடாக இந்தியா மாறியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

-ds