இந்தியாவில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்த வேலைவாய்ப்பின்மை – ஆய்வில் தகவல்

கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலைவாய்ய்பின்மை அதிகரித்திருப்பதாக CMIE வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

CMIE அமைப்பு வேலைவாய்ப்புகள் இல்லாதவர் குறித்து மாதந்தோறும் புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் 8 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் விகிதம் தற்போது 0.3 விழுக்காடு உயர்ந்து 8.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

நகர்புறத்தில் கடந்த நவம்ரில் 8.96 விழுக்காடாக இருந்து வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் விகிதம் டிசம்பரில் 10.09 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவு அதிகம் என்றும் CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.

-ne