பழங்குடியினர் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கிய முதல் மாவட்டம், வயநாடு

கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினரின் அடிப்படை ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன.

அந்தவகையில் நாட்டிலேயே முதல் மாவட்டமாக வயநாடு மாறி இருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக மாவட்ட நிர்வாகத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘அதிகாரம் பெற்ற பழங்குடி சமூகமே வலிமையான இந்தியாவின் அடித்தளமாகும். அனைத்து பழங்குடியினருக்கும் அடிப்படை ஆவணங்களை வழங்கியது மற்றும் டிஜிட்டல் மயமாக்கியதில் இந்தியாவின் முதல் மாவட்டம் வயநாடு என்பதில் பெருமை கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

-dt