விலை வீழ்ச்சி எதிரொலி – வெங்காயத்தை தீயிட்டு கொளுத்தும் விவசாயிகள்

மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காய விளைச்சல் அதிகமாக இருந்தாலும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதனால் நாசிக் உட்பட பல பகுதிகளில் வெங்காயத்தை தீயிட்டு கொளுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விளைவித்த 500 கிலோ வெங்காயத்துக்கு சந்தையில் வெறும் ரூ.2 காசோலை வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எனவே, விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு அரசு உதவ வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையில் வெங்காயத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

 

 

-th