கொச்சியில் 1.4 கிலோ தங்கம் கடத்தி வந்த ஏர் இந்தியா ஊழியர் கைது

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 1.4 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக விமான ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று நேற்று முன்தினம் பஹ்ரைனில் இருந்து கோழிக்கோடு வழியாக கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. இதையடுத்து விமான ஊழியர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் விமானி அறை ஊழியர் ஒருவர் தனது கைகளை சுற்றிலும் 1.4 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர். இந்நிலையில் அந்த ஊழியரை உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இது போன்ற நடத்தையை முற்றிலும் சகித்துக்கொள்ள மாட்டோம். விசாரணை அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை பெறப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட ஊழியருக்கு எதிராக பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

 

 

-th